நுழைவிசைவின்றி சிறிலங்கா வரக் கூடிய 40 நாடுகள் அறிவிப்பு
40 நாடுகளின் பயணிகள், நுழைவிசைவுக் கட்டணம் இன்றி சிறிலங்காவுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் இதனை நேற்று அறிவித்திருந்தார்.
சர்வதேச வருகையை அதிகரிப்பதையும், மீண்டு வரும் சுற்றுலாத் துறையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நுழைவிசைவுக் கட்டணம் இன்றி, வரக்கூடிய 40 நாடுகளின் முழுமையான பட்டியலையும் சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
- பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து
- ஜெர்மனி
- நெதர்லாந்து
- பெல்ஜியம்
- ஸ்பெயின்
- அவுஸ்ரேலியா
- போலந்து
- கசகஸ்தான்
- சவுதி அரேபியா
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
- நேபாளம்
- சீனா
- இந்தியா
- இந்தோனேசியா
- ரஷ்யா
- தாய்லாந்து
- மலேசியா
- ஜப்பான்
- பிரான்ஸ்
- அமெரிக்கா
- கனடா
- செக் குடியரசு (செக்கியா)
- இத்தாலி
- சுவிட்சர்லாந்து
- ஒஸ்ரியா
- இஸ்ரேல்
- பெலாரஸ்
- ஈரான்
- ஸ்வீடன்
- பின்லாந்து
- டென்மார்க்
- தென்கொரியா
- கட்டார்
- ஓமான்
- பஹ்ரைன்
- நியூசிலாந்து
- குவைத்
- நோர்வே
- துருக்கியே
- பாகிஸ்தான்