இந்திய- சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் புதுடெல்லியில் சந்திப்பு
இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் புதுடெல்லியில் நேற்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் விளிம்பு சங்கத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் புதுடெல்லி சென்றுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர் “சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது.
நமது இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்தியத்தின் நிலைமை குறித்து விவாதித்தோம்.
இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கை மற்றும் ‘மகாசாகர் தொலைநோக்கு’ முயற்சி ஆகியன குறித்து இந்தியப் பெருங்கடல் விளிம்பு சங்கத்தில் (IORA) மேலும் கலந்துரையாடல்களை எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

