மேலும்

சிறிலங்கா அதிபர் மீது குற்றவியல் பிரேரணை?- தயாசிறி எச்சரிக்கை

வெளிவராத நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து தெரிவித்த கருத்துக்களின் மூலம், நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்தியதற்காக, சிறிலங்கா அதிபர் அனுரகுமர திசாநாயக்க, குற்றவியல் பிரேரணையை எதிர்கொள்ள நேரிடலாம் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எச்சரித்துள்ளார்.

“சிறிலங்கா அதிபர்  தீர்ப்புகளைப் பற்றிப் பேசுவதன் மூலம் நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்துகிறார்.

அவர் தனது விருப்பத்திற்கு ஏற்ப தீர்ப்புகளை வழங்குமாறு நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறார்.

இத்தகைய நடவடிக்கை நீதிபதிகளை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. அவர்கள் தங்கள் பிழைப்புக்காக தீர்ப்புகளை வழங்க நிர்பந்திக்கப்படுவார்கள்.

அதன்படி, இது நீதித்துறையில் தலையிடுவதற்கான ஒரு தெளிவான நிகழ்வாகும்.

எனவே,  சிறிலங்கா அதிபர் குற்றவியல் பிரேரணையை எதிர்கொள்ள நேரிடலாம்.” என்றும்  நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *