“சீனச்சட்டை“யுடன் இந்தியா புறப்பட்டார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் இந்தியாவிற்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இன்று பிற்பகல் 2.05 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லிக்குப் பயணமானார்.
இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில், செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக அனுரகுமார திசாநாயக்க இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.
இதன்போது இந்தியப் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மக்ரோன் உள்ளிட்டவர்களுடன் சிறிலங்கா அதிபர் இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

