ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி கண்டுபிடிப்பு – சர்ச்சையை கிளப்பிய எக்ஸ் பதிவு.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூழ்ச்சியாளரை கண்டுபிடித்து விட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வெளியிட்ட எக்ஸ் பதிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
உயர்நிலை நியமனக் குழுவில் நான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது, “ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூழ்ச்சியாளரை (big boss) நாம் அடையாளம் கண்டுள்ளோம்” என்று பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை உறுதிப்படுத்தும் போது ரவி செனவிரத்ன தெரிவித்தார் என்று எக்ஸ் தளத்தில் நிசாம் காரியப்பர் மூன்று மொழிகளிலும் பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று கடும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சியினர் அரசாங்கம் உண்மைகளை வெளியிட வேண்டும் என்று கோரியுள்ள அதேவேளை ஆளும்கட்சியின் பொறுப்பின்றி நிசாம் காரியப்பர் இந்த தகவலை வெளியிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
