தீய சக்திகளால் சேதமாக்கப்பட்ட அணையா விளக்கு மீண்டெழுந்தது
தீய சக்திகளால் சேதமாக்கப்பட்ட அணையா விளக்கு நினைவுச் சின்னம் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்- செம்மணியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட அணையா விளக்கு போராட்டத்தின் போது, நிறுவப்பட்ட அணையா விளக்கு நினைவுச் சின்னம் நேறறிரவு தீய சக்திகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
அதன் நினைவாகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரும் வகையிலும் அணையா விளக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.
இந்த நினைவுச் சின்னம் சேதப்படுத்தப்பட்ட நிலையில், இன்று காலை உடனடியாகவே, அணையா விளக்கு நினைவுச் சின்னத்தை மீண்டும் புனரமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, மாலையில் அதற்கான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன.