அடுத்தடுத்து சீனாவுக்குப் பயணமாகும் அமைச்சர்கள்
சிறிலங்கா பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் சீனாவுக்குப் பயணமாகியுள்ளனர்.
சீனாவில் நடைபெறும் காவல்துறை மாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் அவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சீனாவுக்குப் பயணமானதை அடுத்து, பதில் அமைச்சராக சுனில் வட்டகல நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, பதில் காவல்துறை மா அதிபராக பிரதி காவல்துறை மா அதிபர் லலித் பதிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை மாநாட்டில் சிறிலங்கா காவல்துறை மா அதிபர் உரையாற்றவுள்ளார் என்றும் அவர் 20ஆம் திகதி நாடு திரும்புவார் என்று காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்காவின் தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சதுரங்க அபேசிங்க 4 நாட்கள் சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
சீனாவின் சர்வதேச வர்த்தக ஊக்குவிப்புக்கான பேரவையின் அழைப்பின் பேரில், சீனாவின் சிசுவான் மாகாணத்திற்குப் பயணம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு வர்த்தக ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்த பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
அதேவேளை பிரதமர் ஹரிணி அமரசூரியவும் விரைவில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
