அமெரிக்க காங்கிரஸ் குழு சிறிலங்கா வந்தது
அமெரிக்க காங்கிரசின் இருகட்சிகளின் உறுப்பினர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
ஆட்சியியல், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக அமெரிக்காவிலிருந்து இரு கட்சி காங்கிரஸ் அதிகாரிகள் குழு கொழும்பு வந்திருப்பதாக சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் நேற்று, தெரிவித்துள்ளார்.
இவர்கள், ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்துவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுடன் சந்திப்புகள் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் பயணம் தொடர்ச்சியான ஈடுபாட்டின் ஒரு பகுதி என்றும் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க காங்கிரஸின் இரு கட்சி முன்முயற்சியான, நாடாளுமன்ற ஜனநாயக பங்காண்மை அமைப்பு, உலகளாவிய நாடாமன்றங்களை பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்து வருவதுடன். பொருளாதார வளர்ச்சி, பிராந்திய பாதுகாப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கிறது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

