வரவு செலவுத் திட்டம் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது
சிறிலங்கா அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு, 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில், 160 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 42 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளதற்காக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், வி. ராதாகிருஷ்ணன், பி. திகாம்பரம் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் இந்த வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதில் இருந்து விலகியிருந்தனர்.
