ரணிலுக்கு எதிராக முன்னிலையாகும் திலீப பீரிசுக்கு சிறப்புப் பாதுகாப்பு
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கில் முன்னிலையாகிய, பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீப பீரிசுக்கு சிறிலங்கா காவல்துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு அவருக்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கில், சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில், பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்னிலையாகியிருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்குவதற்கு அவர் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
