ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தலுக்கு எதிராக போராட்டம்
வடக்கு, கிழக்கில் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலை நிறுத்தக் கோரி, கொழும்பில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குமணனை அச்சுறுத்துவதை எதிர்ப்போம், வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்து என்ற தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஊடக தொழிலாளர் சங்கம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் ஆகியவற்றின் அழைப்பின் பேரில், நேற்றுக்காலை 9 மணியளவில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.





