தென்னாபிரிக்காவுக்கான தூதுவராக பொறுப்பேற்றார் உதேனி ராஜபக்ச
தென்னாபிரிக்காவுக்கான சிறிலங்காவின் தூதுவராக, சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் சீவ் மார்ஷல் உதேனி ராஜபக்ச பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த 7ஆம் திகதி பிரிட்டோரியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் கடமைகளை பொறுப்பேற்ற அவர், 18ஆம் திகதி, தென்னாபிரிக்க சர்வதேச உறவுகள் திணைக்களத்தின், நெறிமுறைகளுக்கான பதில்தலைவரும், பிரதிப் பணிப்பாளர் நாயகமுமான கிளேசன் மொன்யேலாவிடம், தனது நியமன மற்றும் சான்று பத்திரங்களை கையளித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கும் தென்னாபிரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால மற்றும் நட்புறவுகளை சிறிலங்கா தூதுவர் நினைவுபடுத்தினார்.
இது இருதரப்பு ரீதியாகவும் பலதரப்பு அரங்குகளிலும், தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.
‘நாளைய பிராந்தியங்கள்’ என்ற வகையில் ஆபிரிக்காவும் ஆசியாவும் சர்வதேச அரங்கில் பெருகிய முறையில் முக்கியத்துவம் பெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
