சிறிலங்கா விமானப்படைக்கு புதிய கருவிகளை வழங்கியது அமெரிக்கா
விமானங்களுக்கு எரிபொருள் மீள் நிரப்பும் இரண்டு உயர்வலு சாதனங்களை சிறிலங்கா விமானப்படைக்கு அமெரிக்கா, கொடையாக வழங்கியுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இந்த சாதனங்கள், நேற்று சிறிலங்கா விமானப்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியமானதொரு மைல் கல்லாக இந்த கொடை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா விமானப்படையின் செயற்திறனை வலுப்படுத்துவதற்கான இந்த கொடைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை சிறிலங்கா விமானப்படையின் கடல்சார் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்துவதற்கான அமெரிக்கா அண்மையில் பீச் கிராப்ட் விமானம் ஒன்றை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

