இதுவரை 216 சபைகளில் ஆட்சியமைத்தது என்பிபி
ஆளும் தேசிய மக்கள் சக்தி இதுவரை 216 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைத்துள்ளது.
339 உள்ளூராட்சி சபைகளுக்கு நடந்த தேர்தலில், 157 சபைகளில், தேசிய மக்கள் சக்தி அறுதிப் பெரும்பான்மை பெற்று, நேரடியாக ஆட்சியமைத்திருந்தது.
ஏனைய சபைகளில், நிர்வாகங்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இதுவரை 305 சபைகளில் ஆட்சிகள் நிறுவப்பட்டுள்ளன.
இதில், தேசிய மக்கள் சக்தி 216 உள்ளூராட்சி சபைகளிலும், ஐக்கிய மக்கள் சக்தி 30 சபைகளிலும் ஆட்சியமைத்துள்ளன.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 19 சபைகளில் ஆட்சியமைத்துள்ளது.
தமிழ் தேசிய பேரவை, 4 சபைகளிலும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 3 சபைகளிலும் ஆட்சியமைத்துள்ளன.
சிறிலங்கா பொது ஜன பெரமுன 4 சபைகளிலும், ஐக்கிய தேசிய கட்சி ஒரு சபையிலும் ஆட்சியமைத்துள்ளன.