மேலும்

மயிலிட்டியில் நில மீட்புக்கான கவனயீர்ப்பு போராட்டம்

சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள  தமது காணிகளை விடுவிக்க கோரி, வலி.வடக்கு மக்கள் இன்று நிலமீட்புக்கான கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மயிலிட்டி பேருந்து நிலையத்தில் இன்று காலை முதல் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

பலாலி, மயிலிட்டி, வசாவிளான், கட்டுவன் உள்ளிட்ட பகுதியில், இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ள சுமார் 2500 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலி. வடக்கு பொது அமைப்புகள், கடற்றொழிலாளர் சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து. 35 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகளாக  வாழுகின்ற மக்கள் பெருமளவில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *