சிறிலங்காவின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனா பயணம்
சிறிலங்காவின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றக் குழுவினர் கல்விச் சுற்றுலாவுக்காக சீனா சென்றுள்ளனர்.
அவர்களுடன் நாடாளுமன்ற துணைச் செயலாளர் நாயகமும், தலைமைப் பணியாளருமான சட்டத்தரணி சமிந்த குலரத்னவும், மேலும் மூன்று நாடாளுமன்ற அதிகாரிகளும் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளனர்.
இந்தக் குழு ஒரு வாரத்திற்கும் மேலாக சீனாவில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்தப் பயணங்கள் பெரும்பாலும் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் நிதியுதவியுடன் இடம்பெறுகின்றன.
டில்வின் சில்வா தலைமையிலான ஆளும்கட்சியைச் சேர்ந்த குழுவினர் சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியுள்ள நிலையில், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அங்கு பயணமாகியுள்ளது.