மேலும்

முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரி பக்கம் தாவியது ஏன்? – அமைச்சர் சுசில் விளக்கம்

susil-premajayanthஎதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கத்துக்கு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாவியதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று சிறிலங்கா அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

“சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரிவினைவாத நிகழ்ச்சிநிரலைக் கொண்டிருந்தது.

கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை தொகுதிகளை இணைத்து புதிய தனியான முஸ்லிம் நிர்வாக மாவட்டத்தை அமைக்குமாறு, முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிராகரித்து விட்டார்.

அதனால் தான் முஸ்லிம் காங்கிரஸ் இந்த முடிவை எடுத்தது.

எந்தவொரு கட்சியையும் சமாதானப்படுத்துவதற்காக இதுபோன்ற கோரிக்கைகளுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் இணங்காது.

தேசிய நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அரசில் முடிவுகள் எடுக்கப்படாது.

முஸ்லிம் காங்கிரஸ் இப்போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்துள்ள நிலையில், அதுகுறித்து அவர்கள் என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

முஸ்லிம் காங்கிரசின் தனி மாவட்டக் கோரிக்கை  வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் இனச்சுத்திகரிப்பு முயற்சியை ஒத்ததேயாகும்.

முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கைக்கு செவிசாய்க்கப்பட்டால், ஏனைய சமூகத்தினரும் அவ்வாறு கோருவார்கள்” என்றும் அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *