பணவீக்கம் 7 வீதமாக உயரும் ஆபத்து – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை
அதிகரித்து வரும் உலகளாவிய எரிபொருள் விலைகள் காரணமாக, நாட்டின் பணவீக்கம் 7 வீதமாக உயரக்கூடும் என்று சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கு மோதல் குறுகிய காலத்தில் தீர்க்கப்படும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டாலும், அதன் நீடித்ததன்மை சிறிலங்காவின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பணவீக்கத்தின் மீது மேல்நோக்கிய அழுத்தம் உருவாகி வருகிறது.
ற்போது சுமார் 5.4% முதல் 5.5% வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள பணவீக்கம், தற்போதைய போக்குகள் தொடர்ந்தால் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எரிபொருள் விலைகளில் தொடர்ச்சியான உயர்வை நாங்கள் கவனித்துள்ளோம், அதே நேரத்தில் நுகர்வோர் தேவையில் குறிப்பிடத்தக்க சரிவு எதுவும் காணப்படவில்லை.
இந்த நிலைமைகள் தொடர்ந்தால், பணவீக்கம் 5% ஐத் தாண்டி 7% ஐ எட்டக்கூடிய அபாயம் உள்ளது.
பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய வங்கி தனது பணவியல் கொள்கையை இறுக்கியுள்ளது.
பணவீக்கம் மேலும் அதிகரிப்பதைத் தடுக்கவும், பொருளாதார உறுதித்தன்மையைப் பேணவும், வரும் மாதங்களில் தேவையைக் குறைப்பது அவசியமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
