கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடலோரக் காவல்படை கப்பல்கள்
இந்திய கடலோர காவல்படையின் இரண்டு ரோந்துக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளன.
“வராஹா” (Varaha) மற்றும் “அதுல்யா” (Atulya) ஆகிய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்த போது, சிறிலங்கா கடற்படையினரால், கடற்படை சம்பிரதாயங்களுக்கு அமைவாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
96.2 மீட்டர் நீளமான கடல்சார் ரோந்துக் கப்பலான “வராஹா” கப்பல், கட்டளை அதிகாரி அஷ்வினி குமாரினால் வழிநடத்தப்படுகிறது.
50 மீட்டர் நீளமான அதிவே ரோந்துக் கப்பலான “அதுல்யா” கப்பல், கட்டளை அதிகாரி அனித் குமார் மிஸ்ராவினால் வழிநடத்தப்படுகிறது.
இந்தக் கப்பல்கள் சிறிலங்கா கடலோர காவல்படையினருடனான பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளது.

