ஒரு வார்த்தைக்காக பதவி விலக கோருவது நெறிமுறையற்றது- நளிந்த ஜயதிஸ்ஸ
ஒரு பாடத்தொகுதியில் உள்ள ஒரு வார்த்தையில் உள்ள குறைபாட்டிற்காக, கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவை, பதவி விலக நிர்பந்திப்பது நெறிமுறையற்றது என்று, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடந்த வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
கல்வி சீர்திருத்தங்களில் குறைபாடுகள் இருந்தாலோ அல்லது முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் நாட்டிற்கும் மாணவர்களுக்கும் எதிரானதாக இருந்தாலோ, சம்பந்தப் பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும்.
பாடத் தொகுதியில் உள்ள ஒரு வார்த்தையின் அடிப்படையில், பதவி விலகுமாறு கோருவது நியாயமற்றது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
