சிறிலங்கா பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை- ஐக்கிய மக்கள் சக்தி முடிவு
சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
நேற்று நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுவார்கள் என்ற எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் இன்று இதுபற்றிக் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
புதிய பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்புக்கான ஆங்கில பாடநூலில், சிறுவர்களுக்குப் பொருத்தமில்லாத- வயதுவந்தோருக்கு மட்டுமான இணையத்தள முகவரி இடம்பெற்ற சர்ச்சையை அடுத்து சிறிலங்கா பிரதமரை, கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
