மேலும்

இந்தவாரம் சீன, இந்திய தலைவர்களை சந்திக்கிறார் ஹரிணி அமரசூரிய

சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த வாரம் சீனா மற்றும் இந்தியாவிற்கு இரண்டு உயர்மட்ட பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.

இதன் போது அவர் இரு நாடுகளின் தலைவர்களுடன் நேரடி பேச்சு நடத்த உள்ளார்.

சிறிலங்கா பிரதமர், நாளை திங்கட்கிழமை பீஜிங்கில் நடைபெறும் உலக மகளிர் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஜனாதிபதி ஷி ஜின்பிங்கைத் தவிர,  சீனப் பிரதமர் லி கியாங் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களையும் ஹரிணி அமரசூரிய சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.

பீஜிங்கிலிருந்து, அவர் NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் கலந்து கொள்வதற்காக, புதுடெல்லிக்கு பயணமாகவுள்ளார்.

அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், அவர் முக்கிய பேச்சாளர்களில்  ஒருவராக கலந்து கொள்கிறார்.

சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவின் முதல் இந்திய பயணம் இதுவாகும்.

புதுடெல்லியில் நடைபெறும் NDTV உலக உச்சி மாநாடு 2025 இல், இரண்டு பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவுஸ்ரேலியாவின் டோனி அபோட் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *