பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபரிடம் – அவரே நடவடிக்கை எடுப்பார்
பட்டலந்த வதைமுகாம் குறித்து விசாரணை நடத்திய ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சுமார் இரண்டு பத்தாண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த பட்டலந்த வதைமுகாம் தொடர்பான விசாரணை அறிக்கை, அண்மையில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இந்த அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவர் இது தொடர்பான தேவையான மற்றும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பார் என்றும், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.