ரஷ்யா பற்றிய ஐ.நா அறிக்கையில் சிறிலங்கா விவகாரம்
ரஷ்யாவின் மனித உரிமைகள் நிலைமை குறித்த சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கையில் சிறிலங்கா பற்றிய விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மரியானா கட்சரோவா (Mariana Katzarova ) ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், நேபாளம் மற்றும் சிறிலங்காவில் இருந்து கடத்தப்பட்ட நபர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு குடிமக்களை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தமது இராணுவத்தில் சேர்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சித்திரவதை மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் உடன்பாடுகளில் கையெழுத்திட அவர்களை கட்டாயப்படுத்தப்படுவதாகவும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சித்திரவதை மற்றும் ஏமாற்றுதல் மூலம், இராணுவ உடன்பாடுகளில் கையெழுத்திட கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
இந்த உடன்பாடுகள் அவர்களை முன்னரங்க நிலைகளுக்கு அனுப்ப அனுமதிக்கிறது.
குறைந்தபட்சம் ஒரு சந்தர்ப்பத்தில், உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்ததற்காக ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்றும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.