அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் 275 மில்லியன் ரூபா சொத்துக்கள்
சிறிலங்காவின் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அதிகளவு சொத்துக்களைக் கொண்டிருப்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவரிடம், 150 மில்லியன் ரூபா மற்றும் 75 மில்லியன் ரூபா பெறுமதியான வர்த்தக கட்டடங்கள், 4.5 மில்லியன் ரூபா தங்கம், 15மில்லியன் ரூபா பெறுமதியான வாகனம், உள்ளிட்ட சுமார் 275 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அத்துடன் வாடகை மூலம் 7 மில்லியன் ரூபா வரையும், நிறுவனம் மூலம் 3 மில்லியன் மில்லியன் ரூபாவையும், சூரியசக்தி படல்கள் மூலம், 2 இலட்சம் ரூபா வரையும் வருமானம் பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவற்றை முழுமையாக அமைச்சர் சமரசிங்க வெளிப்படுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே, கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 323 கொள்கலன்களை விடுவித்தமை தொடர்பாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த சொத்துக்கள் தான் முன்னர் சேகரித்தவை என்றும், 28 ஆண்டுகளாக தனியார் கல்வி நிறுவனம் நடத்தியும், வர்த்தகம் மூலமும் அந்த சொத்துகள் சேர்க்கப்பட்டதாகவும், தெரிவித்துள்ள வசந்த சமரசிங்க தாம் வரி செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.