ஓராண்டுக்குள் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்
புதிய பயங்கரவாத எதிர்ப்பு வரைவு சட்டம் இந்த வாரம் சிறிலங்கா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படும், அதன் பிறகு பொதுமக்களின் ஆலோசனைக்காக சமர்ப்பிக்கப்படும் என, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய வரைவு அடுத்த வாரத்திற்குள் ஆங்கிலத்தில் தயாராகி, அதிபர் மற்றும் தொடர்புடைய ஏனைய தரப்பினரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கடந்த வாரம் கூறியிருந்தார்.
ஆவணம் மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டவுடன் பொதுமக்களின் பார்வைக்காக முன்வைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரு வெள்ளை அறிக்கை வடிவில் பொது ஆலோசனை காலம் தொடரும்.
ஆவணத்தை சிங்களம் மற்றும் தமிழில் மொழிபெயர்க்க நேரம் தேவைப்படலாம்.
ஜனநாயக பங்கேற்புக்கு பொது ஆலோசனை அவசியம் என்று கருதப்படுகிறது.
மேலும் நாடாளுமன்ற மறுஆய்வுக்கு முன் பொதுமக்களின் கருத்துகளுக்காக ஆங்கில பதிப்பு குறைந்தது ஒரு மாதமாவது கிடைக்கும்.
புதிய சட்டத்தை முடிந்தவரை விரைவாக இயற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம்.
ஆலோசனையை முடித்து, ஓராண்டுக்குள் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதே இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.