சிறிலங்காவுக்கு பயணமாகும் அமெரிக்க வர்த்தக பணியக அதிகாரிகள்
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பணியகத்தைச் சேர்ந்த குழுவொன்று இந்த மாத நடுப்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
பரஸ்பர வரிகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுப்பதற்கு, சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் அவர்களுக்கு உதவுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உலகளாவிய வரித் திட்டத்தின் கீழ், அமெரிக்கா தனது சந்தையில் நுழையும் சிறிலங்கா பொருட்கள் மீது 20 சதவீத வரிகளை விதித்துள்ளது.
இந்த நிலையில், கொழும்பு வரும் அமெரிக்க குழு வரிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மதிப்பீடு செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரிகளை நடைமுறைப்படுத்தும் தொழில்நுட்ப அம்சங்களை அவர்கள் ஆராய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவுடனான அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறை 2024 ஆம் ஆண்டில் 2.6 பில்லியன் டொலர்களாக இருந்தது என்று வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வர்த்தக இடைவெளியைக் குறைக்க அமெரிக்காவிடமிருந்து கூடுதலான பொருட்களை இறக்குமதி செய்ய சிறிலங்கா ஒப்புக்கொண்டுள்ளது.
இதற்கமைய அமெரிக்காவிடம் இருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய சிறிலங்கா திட்டமிட்டுள்ளது.