காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்த சிறப்புத் திட்டம்
காணாமல்போனவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கான, ஒரு சிறப்புத் திட்டத்திற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
காணாமல்போனோருக்கான பணியகத்தின் தலைமையில் இந்த சிறப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான,10,517 வழக்குகளை 2027 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிப்பதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கை அடைவதற்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த நிர்வாக அதிகாரிகள் மற்றும் சட்டவாளர்கள் உள்ளிட்ட, 75 தகுதிவாய்ந்த நபர்களைக் கொண்ட, 25 உப குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன.