வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்- ஜேவிபி தலைமையகத்தில் பதற்றம்
பலேவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையத்துக்கு முன்பாக நேற்று மாலை பதற்றநிலை ஏற்பட்டது.
வேலையற்ற பட்டதாரிகள் ஜேவிபி தலைமையகம் முன்பாக போராட்டம் நடத்தியதை அடுத்தே, பதற்றமான சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள், கலந்துரையாடுவதற்காக ஜேவிபி தலைமையத்துக்குள் நுழைய முயன்ற போது காவல்துறையினர் அவர்களைத் தடுத்தனர்.
இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.
எனினும் அனுமதியின்றி எவரையும் அனுமதிக்க முடியாது என்று காவல்துறையினர் அவர்களைத் தடுத்து விட்டனர்.
தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.