யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்
கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் 42 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்பான முறையில் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, கறுப்பு ஜூலைக் கொடூரங்களை வெளிப்படுத்தும் நினைவுப் படம் வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று கூடி நினைவுப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கறுப்பு ஜூலை இனப்படுகொலையில் உயிர்நீத்த ஆயிரக்கணக்கான மக்களை நினைவு கூரும் வகையில் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.