மேலும்

Tag Archives: பேராயர்

அநீதிக்கு உள்ளானதாலேயே ஷானி சிஐடி பணிப்பாளராக நியமனம்

முன்னைய அரசாங்கங்களின் காலத்தில், மோசமான அநீதிக்கு உள்ளானதால், மூத்த காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீண்டும், குற்றப் புலனாய்வுத் துறை (CID) பணிப்பாளராக நியமிக்கப்பட்டதாக சிறிலங்கா பொதுப் பாதுகாப்பு அமைச்சர்  ஆனந்த விஜேபால, தெரிவித்துள்ளார்.

ரவி, ஷானி நியமனங்களை பேராயர் குறிப்பிட்டுக் கோரவில்லை

ஷானி அபேசேகரவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவோ,  ரவி செனவிரத்னவை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவோ நியமிக்குமாறு, பேராயர் மல்கம் ரஞ்சித் ஒருபோதும் குறிப்பிட்டுக் கோரவில்லை என்று தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை  ஜூட் கிருஷாந்த தெரிவித்துள்ளார்.

கச்சதீவு புதிய தேவாலயத் திறப்புவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை

புதிதாக அமைக்கப்பட்டுள்ள கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் திறப்பு விழாவில் பொதுமக்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று, மீனவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பதாக, இந்திய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.