வடக்கில் ஒரு தாதி கூட இல்லாத 33 மருத்துவமனைகள் – அமைச்சர் அதிர்ச்சியாம்
வடக்கு மாகாணத்தில் ஒரு தாதி கூட இல்லாத 33 ஆரம்ப மருத்துவமனைகள் இருப்பதாக சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நயினாதீவு மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவை ஆரம்பித்து வைத்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் ஒரு தாதி கூட இல்லாமல் 33 மருத்துவமனைகள் செயற்படுவதாக கேள்விப்பட்டு தான் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதிய தாதிகள் நியமனத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
அடுத்த மாதம் 300 தாதிகளுக்கு நியமனம் வழங்கப்படும் என்றும், அதற்கடுத்த மாதம் மேலும் 300 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும் சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.