நெருங்கி வரும் காலக்கெடு – ட்ரம்பின் வரியால் சிறிலங்கா கலக்கம்
பரஸ்பர வரிகள் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் தொடர்பு கொண்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அறிவித்திருந்த பரஸ்பர வரிகளை நடைமுறைப்படுத்துவதற்கான 90 நாள் கால அவகாசம் வரும் ஜூலை 9ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
இதன் பின்னர் இந்த காலக்கெடுவை நீக்கப் போவதில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.
இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், சிறிலங்கா தொடர்பான வரி இணக்கப்பாடு குறித்து அமெரிக்கா எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அடிப்படையான 10 வீத வரியும், 44 சதவீத பரஸ்பர வரியுமாக சிறிலங்கா 54 சதவீத வரியை அமெரிக்க சந்தையில் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
இது தொடர்பான இரண்டு முறை வொசிங்டனுக்குச் சென்று சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் பேச்சுக்களை நடத்திய போதும், இன்னமும் எந்த முடிவும் அறிவிக்கப்படாதிருப்பது, சிறிலங்கா அரசாங்கத்தை கலக்கத்துக்கு உள்ளாக்கியுள்ளது.