செம்மணி புதைகுழியில் இனங்காணப்பட்ட என்பு எச்சங்கள் 35 ஆக அதிகரிப்பு
யாழ்ப்பாணம்- செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டமாக நேற்று ஆறாவது நாளாக புதைகுழி தோண்டும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஏற்கனவே இனங்காணப்பட்ட எலும்புக்கூட்டு எச்சங்களை அகழ்ந்தெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கமைய ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 33 எலும்புக்கூடுகளில், 31 எலும்புக்கூடுகள் நேற்று வரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இதுவரை 35 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது கட்ட அகழ்வின் போது, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளதுடன், பொம்மை, பாடசாலைப் பை, காலணி உள்ளிட்ட சில தடயப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
அதேவேளை தற்போது எலும்புக்கூடுகள் மீட்கப்படும் பகுதிக்கு அருகே மற்றொரு புதைகுழி இருக்கலாம் என நம்பப்படும் இடத்தை சுத்திகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.