சிறிலங்காவுக்கு 350 மில்லியன் டொலர் வழங்க அனுமதி
48 மாதங்கள் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ், மேலும் 350 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி அளித்துள்ளது.
இதனுடன், சிறிலங்காவுக்கு வழங்கப்படும் கடனுதவி 1.27 பில்லியன் டொலரை எட்டும்.
சர்வதேச நாணய நிதியம் சிறிலங்காவுக்கு 3 பில்லியன் டொலர் பெறுமதியான நீடித்த நிதி வசதியை 48 மாதங்களில் வழங்குவதற்கு இணங்கியது.
இதன் நான்காவது கட்ட மீளாய்வு நிறைவு பெற்றுள்ள நிலையில், 350 மில்லியன் டொலர் நிதியை விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.