சிறிலங்காவில் ஸ்டார் லிங் இணைய வசதி ஆரம்பம்
எலோன் மஸ்க்கின் ஸ்டார் லிங் நிறுவனம் சிறிலங்காவில் தமது செய்மதி இணைய வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.
இந்த அதிவேக இணைய இணைப்பை தற்போது பெற்றுக் கொள்ள முடியும் என ஸ்டார் லிங் தெரிவித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருந்த போது, ஸ்டார் லிங் நிறுவனம், இணைய வசதியை ஏற்படுத்துவது குறித்து பேச்சு நடத்தி இணக்கப்பாடு ஏற்படுத்தியிருந்தது.
எனினும் தற்போதைய அரசாங்கம், இணையத் தரவு தகவல்களை பகிர்ந்து கொள்வதில் ஸ்டார் லிங் நிறுவனத்துடன் இணக்கப்பாடு ஏற்படவில்லை என்று கூறியிருந்தது.
இந்தநிலையில், சிறிலங்காவில் ஸ்டார் லிங் இணைய இணைப்பை தற்போது பெற்றுக் கொள்ள முடிகிறது.
பூட்டான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை அடுத்து, தெற்காசியாவில் ஸ்டார் லிங் இணைய வசதியை பெற்றுள்ள மூன்றாவது நாடு சிறிலங்கா ஆகும்.
இந்த நிறுவனம் அடுத்ததாக, இந்தியாவில் காலூன்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.