செப்ரெம்பருக்குள் புதிய பயங்கரவாத தடைச்சட்டம்
தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டு, வரும் செப்ரெம்பர் மாதத்திற்குள் ஒரு புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என, சிறிலங்காவின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சிறிலங்காவிற்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே, ஐ.நா நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, சீர்திருத்தங்கள் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்த அடிப்படை உரிமைகள் வழக்குகளில் அரசாங்கம் தலையிடவில்லை என்றும் நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
ஏதேனும் தவறுகள் இருந்தால், நீதிமன்றங்கள் அதை ஆராயும். பல குற்றச்சாட்டுகள் தற்போது நீதிமன்றங்களில் உள்ளன.
ஒரு கொள்கையாக, சித்திரவதை நடந்திருந்தால் நாங்கள் பொறுத்துக் கொள்ளமாட்டோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.