கொழும்பு பங்குச் சந்தையில் நேற்று மட்டும் 117 பில்லியன் ரூபா இழப்பு
கொழும்பு பங்குச் சந்தை நேற்று ஒரே நாளில் 117 பில்லியன் டொலர் இழப்பைச் சந்தித்துள்ளது.
மத்திய கிழக்கு நிலைமைகள் மோசமடைந்த நிலையில் இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதனால் நேற்றுக்காலை 6.117 ட்ரில்லியன் ரூபாவில் தொடங்கிய பங்கு பெறுமதி, 6 ட்ரில்லியன் ரூபாவில் முடிவடைந்துள்ளது.
ஏப்ரல் 9ஆம் திகதிக்குப் பின்னர் ஒரே நாளில் ஏற்பட்ட பெரும் பங்குச் சந்தை வீழ்ச்சி இதுவாகும் என பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.