சிறிலங்காவில் அதிக எச்சரிக்கையுடன் இருங்கள்- அவுஸ்ரேலியா ஆலோசனை
சிறிலங்காவுக்கான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ள அவுஸ்ரேலிய அரசாங்கம், அதிகளவு எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக சிறிலங்காவில் அதிக அளவு எச்சரிக்கையுடன் இருங்கள் என்று அந்தப் பயண ஆலோசனையில் அவுஸ்ரேலியா கூறியுள்ளது.
சிறிலங்கா தொடர்பாக, இரண்டாம் ஆம் நிலை பயண ஆலோசனையை அவுஸ்ரேலியா வெளியிட்டுள்ளது.
ஒரு பெரிய அவுஸ்ரேலிய நகரத்தில் நீங்கள் வழக்கமாகக் காணக்கூடியதை விட, அதிகமாகவோ அல்லது மிகஅதிகமாகவோ ஆபத்துகள் உள்ளன என்றும் அந்தப் பயண ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.