ஜப்பானிய பாதுகாப்பு உதவிகள் – இன்னமும் இணக்கம் ஏதும் இல்லையாம்
ஜப்பானிடம் இருந்து பாதுகாப்பு உதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான ஜப்பானின் அதிகாரபூர்வ பாதுகாப்பு உதவித் திட்டத்தில், சிறிலங்கா உள்ளிட்ட மேலும் 5 நாடுகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர,
ஜப்பானுடன், இப்போதுதான் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சலுகையை பரிசீலிக்கத் தொடங்கியுள்ளோமே தவிர, எந்த காலவரையறையோ அல்லது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தோ ஒப்புக் கொள்ளப்படவில்லை.
நாங்கள் இப்போதுதான் பேசுவதற்காக மேசையில் அமர்ந்துள்ளோம்.”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.