ஐ.நா ஒருங்கிணைப்பாளரின் கடிதத்திற்கு பதிலளிக்காத சிறிலங்கா
டொக்டர் பிரிட்ஜோவ் நான்சன் என்ற ஐ.நா கொடியுடனான ஆய்வுக் கப்பலை அனுமதிப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஐ.நா பணியகம் அனுப்பிய கடிதத்திற்கு பதில் அளிக்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நாவின் சிறிலங்காவிற்காக ஒருங்கிணைப்பு பணியகம், சிறிலங்காவின் கடல் எல்லைக்குள் ஐ.நா. கொடியின் கீழ் ஒரு ஆய்வுக் கப்பலை அனுப்ப அனுமதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக கலந்துரையாடவும், தேவையான தகவல்களை வழங்கவும்- கூடிய விரைவில் ஒரு சந்திப்பை நடத்த ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் தயாராக இருக்கிறார் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
கடந்த ஜூன் 12ஆம் திகதி அனுப்பப்பட்ட அந்த கடிதத்திற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இன்னமும் முறையாகப் பதிலளிக்கவில்லை.
இதனால், ஐ.நா கொடியுடனான ஆய்வுக் கப்பலின் பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.