ஊர்காவற்றுறை பிரதேச சபை தமிழ்த் தேசிய பேரவை வசமானது
ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளராக தமிழ்த் தேசியப் பேரவையைச் சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை நடந்த சபையின் புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அமர்வில், தமிழ்த் தேசிய பேரவை மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி என்பன வேட்பாளர்களை முன்மொழிந்தன.
இதில், இரண்டு வேட்பாளர்களும் தலா 5 வாக்குகளைப் பெற்ற நிலையில், திருவுளச் சீட்டு மூலம் தமிழ்த் தேசியப் பேரவையைச் சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசா ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
பிரதித் தவிசாளராக செபஸ்தியாம்பிள்ளை லெனின் றஞ்சித் ஒருமனதான தெரிவு செய்யப்பட்டார்.
இங்கு ஈபிடிபியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் தமிழ் அரசுக் கட்சியின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
ஊர்காவற்றுறை பிரதேச சபை 1998ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக ஈபிடிபியின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.