கடந்த ஆண்டு 212 கைதிகள் சட்டவிரோதமாக விடுதலை
கடந்த ஆண்டு சிறப்பு நாள்களில் வழங்கப்பட்ட சிறிலங்கா அதிபர் பொதுமன்னிப்பை பயன்படுத்தி, குறைந்தபட்சம் 212 கைதிகள் சட்டவிரோதமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சுதந்திர தினம், வெசாக், மற்றும் கிறிஸ்மஸ் தினங்களை முன்னிட்டு, வழங்கப்படும் ஜனாதிபதி பொதுமன்னிப்பை தவறாகப் பயன்படுத்தி, இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தி வரும் விசாரணைகளிலேயே இந்த விபரம் தெரியவந்துள்ளது.
குறித்த சிறப்பு நாள்களில், சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு உத்தரவுக்குப் புறம்பான வகையில் இவர்கள் விடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த சட்டவிரோத விடுதலைகளில் பல்வேறு சிறைச்சாலைகளின் அதிகாரிகள் தொடர்புபட்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.