யாழ்., திருமலைக்கும் செல்கிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், மூன்று நாள்கள் சிறிலங்கா பயணத்தின் போது, யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி ஆகிய இடங்களுக்கும் செல்லவுள்ளார்.
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
கொழும்பில் அவர் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, மற்றும் குறிப்பிட்ட சில அமைச்சர்கள், சிவில் சமூக குழுவினரைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2016 பெப்ரவரி மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த செயிட் ராட் அல் ஹூசேன் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டு 9 ஆண்டுகள் கழித்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் சிறிலங்கா பயணம் இடம்பெறவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வரும் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் சென்று பாதிக்கப்பட்ட மக்களையும், அரசியல் கட்சிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகளையும், மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் சந்திக்கவுள்ளார்.