மேலும்

மாதம்: December 2019

கொழும்பு வருகிறார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ரொஷிமிட்சு மொடேகி இந்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எம்சிசி கொடை உடன்பாடு – கையெழுத்திடத் தயாராகும் சிறிலங்கா

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் மிலேனியம் சவால் நிறுவனத்துடன் கொடை உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்குத் தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

புலனாய்வு அமைப்புகளுக்கு இணையத் தாக்குதல்களை கையாளும் பயிற்சி

எதிர்காலத்தில் இணையத் தாக்குதல்களை கையாளும் வகையில் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்று, சிங்கப்பூரின் நயாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கற்கைகள் பேராசிரியர் றொகான் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொலைக் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு  – மைத்திரிக்கு உச்சநீதிமன்றம் அழைப்பாணை

மரணதண்டனை விதிக்கப்பட்ட கொலைக் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்த முன்னாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சிறிலங்கா உச்சநீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

சுவிஸ் தூதரக பணியாளரின் வாக்குமூலம் – நாளை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பெண் பணியாளரிடம் மூன்று நாட்களாக நடத்தப்பட்ட விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நாளை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி

அனைத்துலக நாடுகளினதும் மனித உரிமை நிறுவனங்களினதும் மிக கடுமையாக இனஅழிப்பு குற்றச்சாட்டிற்கு மத்தியில், ரொகின்யா மக்களுக்கு எதிராக தனது இராணுவம் நடத்திய செயல்கள் சரியானவையே என்று அனைத்துலக நீதிமன்றில் மியான்மர் அரச தலைவர் ஒன் சான் சுகி வாதிடவுள்ளார்.

சுவிஸ் தூதரகப் பணியாளரிடம் இன்றும் தொடர் விசாரணை

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும், கொழும்பில் உள்ள சுவிஸ்  தூதரக பணியாளரிடம், இன்று மூன்றாவது நாளாகவும், குற்ற விசாரணைத் திணைக்களத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

மூதூரில் முன்னாள் போராளிகள் 4 பேர் கைது

திருகோணமலை மாவட்டத்தில்  உள்ள மூதூர் பிரதேசத்தில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் நால்வர் சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரிகேடியர் பிரியங்கவை குற்றவாளியாக அறிவித்த லண்டன் நீதிமன்றம்

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை குற்றவாளி என அறிவித்த வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம், அவருக்கு தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவராக கமல் குணரத்ன

சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவராக, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று பதவியேற்றுள்ளார்.