சுயாதீனமான புலனாய்வுப் பிரிவுகள் அவசியம் -சம்பிக்க
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, புலனாய்வுப் பிரிவுகள் அரசியல் தலையீடுகளில் இருந்து விடுபட்டு சுயாதீனமாக இயங்க வேண்டும் என்று, சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான பணிகளில் இருந்து விலகி, அரசியல் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க புலனாய்வு பிரிவுகள் கட்டாயப்படுத்தப்படுகின்றன என்றும் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டினார்.
புலனாய்வுப் பிரிவுகள் அரசியல் தலையீடுகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்,என்றும் சுயாதீனமாக செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.