மேலும்

கொழும்பு துறைமுகத்தில் ரஷ்ய போர்க்கப்பல்

ரஷ்ய கடற்படையின் Gorshkov என்ற போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

136 மீற்றர் நீளம் கொண்ட Admiral Gorshkov வகையைச் சேர்ந்த இந்தப் போர்க்கப்பலில், 28 அதிகாரிகளும், 208 மாலுமிகளும் உள்ளனர்.

கொழும்பில் தரித்து நிற்கும் போது, சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து ரஷ்ய கடற்படையினர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த ரஷ்ய போர்க்கப்பல் நாளை மறுநாள்  கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *