மேலும்

விக்கியின் நிராகரிப்பு – கம்மன்பில அதிர்ச்சி

மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக, புளோரிடாவின் பீட்டா ஆய்வகத்தில் நடத்தப்பட்ட கார்பன் ஆய்வு அறிக்கையை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்திருப்பது குறித்து கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

“ஓய்வுபெற்ற நீதியரசர் இத்தகைய முடிவை எடுத்திருப்பது உண்மையிலேயே அதிர்ச்சியை அளிக்கிறது.

மன்னார் புதைகுழி விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்கிறது.

அமெரிக்க ஆய்வகத்தின் அறிக்கை தொடர்பாக அவர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் தரும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *