மேலும்

2018இல் நாடாளுமன்றில் வாயை மூடியிருந்த 13 எம்.பிக்கள் – அங்கஜன், ஆறுமுகனும் அடக்கம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 2018ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் டிசெம்பர் வரையான நாட்களில், 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், விவாதங்கள் எதிலும் உரையாற்றவில்லை என்று தெரியவந்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் வெளியிடப்பட்ட நாடாளுமன்றப் பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டு, ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு முழுவதும் நாடாளுமன்றத்தில் மௌனம் காத்த உறுப்பினர்களில் 12 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவர்களாவர். மற்றொருவர் ஐதேகவின் உறுப்பினர் வசந்த சேனநாயக்க ஆவார்.

நாடாளுமன்றத்தில் வாயை மூடிக் கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களில், கலாநிதி சரத் அமுனுகம, இந்திக பண்டாரநாயக்க, தாரநாத் பஸ்நாயக்க, லக்ஸ்மன் செனிவிரத்ன, லக்ஸ்மன் வசந்த பெரேரா, அங்கஜன் இராமநாதன், லொகான் ரத்வத்த, சிறிபால கம்லத், ஜனக பண்டார தென்னக்கோன், ஆறுமுகன் தொண்டமான், தேனுக விதானகமகே, துலிப் விஜேசேகர ஆகியோர் அடங்கியுள்ளனர்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே, கடந்த ஆண்டு விவாதங்கள் எதிலும் பங்கேற்கவில்லை என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *