மேலும்

குற்றவாளிகளைப் பாதுகாக்கவா மனித உரிமை ஆணைக்குழு?- சிறிசேன பாய்ச்சல்

சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு மீது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றவாளிகளைப் பாதுகாக்கப் போகிறதா அல்லது பொதுமக்களைப் பாதுகாக்கப் போகிறதா என்று நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறப்பு அதிரடிப்படையை நிறுத்துவதற்கு, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாகவும், ஐ.நா அமைதிப்படைக்கு அனுப்பப்படும் சிறிலங்கா படையினரை ஆய்வுக்குட்படுத்தும் விவகாரம் தொடர்பாகவும், சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு மீது, மைத்திரிபால சிறிசேன இரண்டு வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

நேற்று மீண்டும் நாடாளுமன்றத்தில் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு மீது அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *